புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

News image

சென்னை எழும்பூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி.

Updated On :18 நவம்பர் 2024, 6:35 am

DIN

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்ப்பாட்டத்தின் போது, தெலுங்கு பேசும் பெண்கள், திராவிடர்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடா்பாக அவா் மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர்.

இதனிடையே, நடிகை கஸ்தூரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரி தலைமறைவாக இருந்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இவ்வழக்கில் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரியை காவல்துறையினர் ஞாயிற்றுகிழமை காலை சென்னை அழைத்து வந்தது. பின்னர் சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையை முடித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

தொடர்ந்து, நடிகை கஸ்தூரிக்கு நவ. 29 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிககை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.