ஏஞ்சல் படத்தில் விலகிய துணை முதல்வர் உதயநிதி! ரூ. 25 கோடி கேட்ட தயாரிப்பாளர் மனு தள்ளுபடி!

படத்தை முடித்துக் கொடுக்காமல் விலகியதற்காக இழப்பீடு வழங்குமாறு தயாரிப்பாளர் அளித்த மனு தள்ளுபடி
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)
உதயநிதி ஸ்டாலின் (கோப்புப் படம்)X | Udhay Stalin
Published on
Updated on
1 min read

ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காமல் விலகியதற்காக உதயநிதி ஸ்டாலின் இழப்பீடு வழங்குமாறு, தயாரிப்பாளர் அளித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற பின், திரைப்படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். 2023 ஆம் ஆண்டில் வெளியான மாமன்னன் படம்தான், தனது கடைசிப் படம் என்று கூறினார். இந்த நிலையில், 2018 ஆம் ஆண்டில் ஓ.எஸ்.டி. ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஏஞ்சல் படத்தை முடித்துக் கொடுக்காமல் விலகியதற்காக இழப்பீடு கோரி, அந்நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தயாரிப்பாளர் ராமசரவணனின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தயாரிப்பாளர் மனுவை நிராகரிக்குமாறு உதயநிதி மனு தாக்கல் செய்திருந்தார். காலதாமதமாக மனு அளித்துள்ளதாகவும், தெளிவில்லாத மனு என்றும் கூறிய உதயநிதி, தயாரிப்பாளரின் மனுவை நிராகரிக்குமாறு நீதிமன்றத்தில் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காரமன், உதயநிதியின் `நிராகரிக்க கோரிய மனுவை’ ஏற்றுக்கொண்டு, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இயக்குனர் கே.எஸ். அதியமான் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாகவும், நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத், நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடிப்பிலும் 2018 ஆம் ஆண்டில் ஏஞ்சல் படம் இயக்கப்பட்டு வந்தது.

கிட்டத்தட்ட 80 சதவிகித படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில், 20 சதவிகித படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், உதயநிதி ஸ்டாலின் விலகி விட்டதாக தயாரிப்பாளர் ராமசரவணன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதுமட்டுமின்றி, இன்னும் 8 நாள்கள் கால்ஷீட்டை புறக்கணித்ததற்காக ரூ. 25 கோடி இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com