இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

தஞ்சாவூர்: வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை

தஞ்சை அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட ரமணி.. கொலை செய்த மதன்

Updated On :

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை, வகுப்பறையிலேயே கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

மல்லிப்பட்டினம் அருகே உள்ள சின்னமனை பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி(23). இவர் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகக் கடந்த சில மாதங்களாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அதேப் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் மதன் (30) என்பவர் ரமணியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது பெற்றோரிடம் கூறி பெண் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து, ரமணி வீட்டுக்கு சில நாள்களுக்கு முன் பெண் கேட்டுச்சென்ற மதனின் பெற்றோரிடம், ரமணிக்கு மதனை திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை என ரமணியின் பெற்றோர் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மதன், இன்று காலை மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரமணி வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்தபோது வகுப்பறைக்குள் புகுந்து அவரது கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தியதில் ரமணி மயங்கி விழுந்தார்.

உடனே சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார் . இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.