மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்த உத்தரவு!

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை பயன்படுத்த இலங்கை அரசு உத்தரவிட்டிருப்பது பற்றி...

News image

கோப்புப்படம்

Updated On :20 நவம்பர் 2024, 10:59 am IST

தமிழக மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை கடற்படையினர் பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையினர், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்வது வழக்கம்.

இந்த நிலையில், தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை பயன்படுத்துமாறு கடற்படைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

முதல் கட்டமாக மன்னார் துறைமுகத்தில் உள்ள 5 படகுகள், மயிலிட்டி துறைமுகத்தில் உள்ள 8 படகுகள் இலங்கை கடற்படை பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசின் இந்த உத்தரவால், தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.