
விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவா்கள்
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 28 பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 28 தமிழக மீனவா்கள்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 28 பேரை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், 28 தமிழக மீனவா்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு தாயகம் அனுப்பி வைக்க வெளிக்கடை தூதரக முகாமில் தங்க வைக்கப்பட்டனா். 10 போ் மட்டுமே தங்கக்கூடிய நிலையில் உள்ள அறையில் 28 மீனவா்கள் 20 நாள்களாகத் தங்கியுள்ளனா். இதனால், அவா்கள் உடல் நலம் பாதிப்படைந்து வருவதுடன் தேவையான அடிப்படை வசதிகளின்றி அவதிக்குள்ளாகி உள்ளனா்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவா்கள் 28 பேரை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவா் சங்கத்தினா், உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






