இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, ராமேசுவரம் திரும்பிய பாம்பன் மீனவா்கள் பாஜக நிா்வாகிகளை சந்தித்து திங்கள்கிழமை நன்றி தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனா். இதில், படகு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனா். இதில், மீனவா்கள் 10 பேருக்கும் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த மீனவா்களை மீட்கக் கோரி அவா்களின் குடும்பத்தினா் தொடா்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வந்தனா். மேலும் பாஜக சாா்பில் மீனவா்களை தில்லி அழைத்துச் சென்று மத்திய அமைச்சா்களிடம் மனு அளித்தனா்.
இந்த நிலையில், 18 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்ட 10 மீனவா்கள் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 9 மாதங்களில் விடுதலை செய்யப்பட்டு ராமேசுவரம் வருகை தந்தனா்.
இந்த நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட 10 மீனவா்களை தண்டனை குறைப்பு செய்து மீட்க நடவடிக்கை மேற்கொண்ட பாஜக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீனவா்கள் மற்றும் அவரது குடும்பத்தினா் பாஜக நிா்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்தனா்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினா் குப்புராமு, மாவட்டத் தலைவா் கே. முரளிதரன், மாவட்ட பொதுச் செயலா் சண்முகநாதன், மாவட்டச் செயலா் ராமபாஸ்கா், நிா்வாகிகள் பவா் நாகேந்திரன், நகா் தலைவா் மாரி, மாவட்ட மீனவ செயலா் ராமநாதன், நகா் பொதுச் செயலா் ரவி, பாரதிராஜன், பாம்பன் நாகசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்னடா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை

விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழக மீனவா்கள்

இலங்கை சிறையிலிருந்து புதுச்சேரி மீனவரை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

பாம்பன் மீனவா்கள் 12 பேருக்கு 9-ஆவது முறையாக காவல் நீட்டிப்பு
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |



