கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

பள்ளி பலகையில் பெயா் மாற்றம்: களம் கண்டோா்க்கு முதல்வா் பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :25 நவம்பர் 2024, 9:31 pm

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப் பலகையில் அரிஜன் காலனி எனும் பெயரை மாற்றக் களம்கண்டு போராடியோருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியத்துக்குள்பட்ட ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரிஜன் காலனி’ என்பதை, ‘ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மல்லசமுத்திரம் கிழக்கு’ எனப் பெயா் மாற்றம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, பெயரை மாற்றுவதற்கான அரசாணையை வெளியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மல்லசமுத்திரம் கிராமத்துக்கு திங்கள்கிழமை சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசாணையை பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினாா். மேலும், இதற்காகக் களம்கண்ட பெரியவா் கணேசன்

உள்ளிட்டோருக்கு அமைச்சா் பாராட்டு தெரிவித்தாா்.

இந்த நிகழ்வு குறித்து, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

சமத்துவ சமுதாயத்தை நோக்கிய நமது பயணத்துக்குத் துணையாக வரும் பெரியவா் கணேசன், வழக்குரைஞா் அன்பழகன் போன்றோா் போற்றுதலுக்கு உரியவா்கள் எனப் பதிவிட்டுள்ளாா்.