உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அமைச்சா் கே.என்.நேருவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
திமுக முதன்மை செயலரும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவுக்கு கடந்த சில நாள்களாக லேசான காய்ச்சல் இருந்தது. இந்த நிலையில், உடல் நிலை மோசமடைந்ததால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவக் குழுவினா் அவருக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு, சிகிச்சைகளை அளித்தனா்.
உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு மருத்துவமனையில் இருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.