

புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி கடற்கரைக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன.
புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், மக்கள் கடற்கரையில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி கடலில் மக்கள் இறங்கக் கூடாது என அறிவுறுத்திய நிலையில் மக்கள் தொடர்ந்து கடற்கரைக்கு வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் இன்று மாலை புயலாக உருவாகவிருப்பதால், புதுச்சேரி கடற்கரை இன்று காலை முதலே கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் கடற்கரைக்குள் நுழையாத வகையில், சாலைகள் மூடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.