
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் விரைவில் மழைத் தொடங்கப்போகிறது, மாலை அல்லது இரவிலிருந்து மழை தீவிரமடையும். ஆனால் பரவலாக கனமழை பெய்யும் என சொல்லிவிட முடியாது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் பெங்ஜால் புயலாக உருமாறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் ஒரு நீண்டப் பதிவையிட்டுள்ளார்.
இந்த புயல் சின்னமானது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் புதுவை கடலோரப் பகுதிகள் வரை மிக அதிககனமழையைக் கொடுக்கும். சனிக்கிழமைதான் அதிக கவனம் தேவைப்படும். ஒரு வேளை இந்த நிலை ஞாயிறு வரையும் தொடரலாம்.
இதுக்கு மேல சொன்னா, ஹைப், கைப்புன்னு ஒரு கூட்டம் வரும். இந்த நாட்டுல நல்லது சொல்லறதா இருந்தாலும் யோசிச்சிதான் சொல்லணும் போல. ஆனால் இந்த பதிவுகள் என்னை 10 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தொடர்பவர்களுக்குத்தான். இது அவர்களுக்காக மட்டுமே. மற்றவர்கள் இதனை புறக்கணித்துவிடலாம்.
இதையும் படிக்க.. சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை
இந்தப் புயல் சின்னமானது சென்னை - புதுவை வரையில் மிக அதிக மழையைக் கொட்டிச்செல்லும். அதனால் கவனமுடன் இருக்க வேண்டும். நேற்று இரவும் கூட, ஒரு சிறு மேகக் கூட்டம் 50 - 60 மிமீ மழையைக் கொடுத்திருந்தது.
இந்த புயல்சின்னத்தைப் பற்றிய எனது கணிப்பில் நான் உறுதியாக இருக்கிறேன். புயலைப் பற்றி நான் சரியாக அல்லது தவறாக கணித்திருக்கிறேன் என்பதை பெருமையுடன் காட்டுவதறக்க அல்ல. அண்மையில் என்னைப் பற்றிய மோசமான விமர்சனங்களையும் தாண்டி, எனது கருத்துகளை நான் இன்னும் தைரியமாக வெளிப்படுத்தவே.
தற்போதைய கணிப்புப்படி, இந்த புயல் சின்னம் மிக மிக பலமானதுதான், சற்று அதிக கவனத்துடனே இதனை கவனித்து வருகிறேன், பார்க்கலாம், எப்படி வருகிறது என்று. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதைப் பார்க்கும்போது, அனைத்து மோசமான விமர்சனங்களையும் மறந்துபோய்விடுவேன். எனக்கு ஆதரவளிப்பவர்களுக்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.