

கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஃபெங்ஜால் புயல், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த புயலானது காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையைக் கடக்கும் என்பதால், தமிழக வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. சென்னை முதல் புதுச்சேரி வரை.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை
புயல் எச்சரிக்கை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூரில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.