ஜோலார்பேட்டை-சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் சேவை நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 5 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரும் விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று செல்ல வேண்டிய ரயில் ரத்தான நிலையில் மறுமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இணைப்பு ரயில் ரத்து செய்யப்பட்டதால் இந்த ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கோரக்பூர்-திருவனந்தபுரம், தன்பாத்-ஆலப்புழா ரயில்களும் மாற்றுப் பாதையில் திருப்பிடப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் சென்னை சென்ட்ரலில் நிற்பதற்கு பதிலாக பெரம்பூரில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக கனமழையைத் தொடர்ந்து பாலம் எண்:14ல் ரயில் சேவை தற்காலிகமாக தடைபட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.