
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்கள் இன்று (அக். 2) நிறைவேற்றப்பட்டன.
மதுவிலக்கை தேசியக் கொள்கையாக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிகவின் மது ஒழிப்பு மாநாடு இன்று (அக். 2) நடைபெற்று வருகிறது.
இதில், திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணைத் தலைவர் உ.வாசுகி மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றுள்ளனர்.
மது மற்றும் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
12 தீர்மானங்கள்
அரசமைப்புச் சட்டம் 47-ல் கூறியபடி மதுவிலக்கு சட்டத்தை இயற்ற வேண்டும்.
மது விலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.
மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி, ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும்.
மதுவால் மனிதவளம் பாதிக்கப்படுவதால் விசாரணை ஆணையம் கொண்டுவர வேண்டும்.
போதைப்பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுவிலக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். படிப்படியாக கடைகளை மூட வேண்டும்.
மது ஒழிப்பிற்கான விழிப்புணர்வு இயக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.
குடி நோயாளிகளுக்கு நச்சு நீக்க சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் போதிய மையங்களை அரசு அமைக்க வேண்டும்.
மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கு மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைக்க வேண்டும்.
டாஸ்மாக் மதுவிற்பனை ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்.
படிக்க | மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது: அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் அரசு மட்டும் ஈடுபட்டால் போதாது. இதில் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். இது அனைவரின் கடமையாகும்.
என மது ஒழிப்பு மாநாட்டில் 12 தீர்மானங்களை மேடையில் திருமாவளவன் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.