கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்

சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

News image

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

Updated On :6 அக்டோபர் 2024, 11:10 am

DIN

சென்னை மாநகராட்சி தி.மு.க கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க வின் சென்னை தெற்கு மாவட்ட மதுரவாயல் வடக்கு பகுதி 144-வது வட்ட செயலாளராக இருந்து வந்தவர் ஏ.ஸ்டாலின். குடிநீர், கழிவுநீர் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி தி.மு.க.பொதுச்செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி, 144-வது வட்டச் செயலாளரும், சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.ஸ்டாலின் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.