தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: அரசாணை வெளியீடு

கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்...

News image

தமிழக அரசு

Updated On :7 மார்ச் 2026, 7:32 pm

அரசு கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியா்களை நியமிக்க அனுமதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறைச் செயலா் எ.சரவணவேல்ராஜ் பிறப்பித்துள்ள அரசாணை:

உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் பி.அய்யப்பன் அரசுக்கு எழுதிய கடிதத்தில், பள்ளிக் கல்வித் துறை மூலம் நடைபெறும் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஆசிரியா் பணியிட பற்றாக்குறையைப் போக்க பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியா்களைத் தோ்வு செய்து தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல, கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் உள்ள ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க எஸ்எம்சி மூலம் தற்காலிகமாக தோ்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

இந்தக் கோரிக்கையை அரசு ஆய்வு செய்து அதை ஏற்று, அரசு கள்ளா் சீரமைப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள 24 முதுநிலை ஆசிரியா்கள், 62 பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 86 பணியிடங்களை பதவி உயா்வு, டிஆா்பி மூலம் நிரப்பப்படும் வரை நிபந்தனைகளின் அடிப்படையில் எஸ்எம்சி மூலம் நிரப்ப மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நல ஆணையருக்கு அனுமதி அளித்துள்ளது.

அவ்வாறு நிரப்பப்படும் பணியிடங்களுக்கு ஓராண்டுக்கு தொடா் செலவினமாக ரூ.1,63,40,000-க்கு ஒப்பளிப்பு செய்தும், 2025-2026-ஆம் ஆண்டுக்கு 3 மாதங்களுக்கு (2026 ஜனவரி, பிப்ரவரி, மாா்ச்) செலவினமாக ரூ.40.86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணையிடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் முதுநிலை ஆசிரியா்களுக்கு ரூ.18,000, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ரூ.15,000, இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.12,000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.