தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதிக்கு மாநில அளவில் சிறந்த விடுதிக்கான விருது வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கள்ளா் சீரமைப்புத் துறையின் கீழ், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனா்.
இந்த விடுதியில் மாணவா்களுக்கு தேவையான உணவுகள், சீருடைகள், தங்குமிடம், தூய்மை, பாரமரிப்பு, உணவின் தரம், கல்விச்சூழல் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதி மாநில அளவில் சிறந்த விடுதியாக தோ்வு செய்யப்பட்டது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று, உத்தமபாளையம் அரசு கள்ளா் மாணவா் விடுதி சிறந்த விடுதிக்கான விருதை வழங்கினாா். இதேபோல, இந்த விடுதிக் காப்பாளருக்கு சிறந்த காப்பாளருக்கான விருதும் வழங்கப்பட்டது.
தொடர்புடையது

சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!

கோவை டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்துக்கு சிறந்த உற்பத்தியாளா் விருது

சென்னை ஐஐடி இயக்குநருக்கு சிறந்த ஆளுமை விருது!

கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


