
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.
திருவண்ணாமலை, ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மகளிரால் மட்டுமே முடியும்!
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 3வது வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.