
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(வயது 84) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
பெங்களூரு மருத்துவமனையில் இருந்து இன்று சென்னை கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தங்கை செல்வியின் கணவர் முரசொலி செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் சகோதரர் ஆவார்.
இவர், முதுமை தொடர்பான உடல்நலக் குறைவுக்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
திமுகவின் நாளிதழான முரசொலியின் வளர்ச்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய முரசொலி செல்வம், நிர்வாக ஆசிரியராக பொறுப்பு வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.