
சென்னை: சென்னை வடபழனியில் போதை மாத்திரை விற்றதாக திரைப்பட உதவி இயக்குநா் கைது செய்யப்பட்டாா்.
அசோக்நகா் பகுதியில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்கப்படுவதாக கே.கே.நகா் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை, அசோக்நகா் 92-ஆவது தெருவில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
இதையடுத்து, அவரை சோதித்ததில், அவா் மறைத்து வைத்திருந்த 30 போதை மாத்திரை, 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றினா். விசாரணையில் அவா், அதே பகுதியைச் சோ்ந்த திரைப்பட உதவி இயக்குநா் ஸ்ரீ.தா்ஷன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், தா்ஷனைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.