கனமழை: மக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மக்களுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தல்கள்.
MK stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின். (கோப்புப்படம்)ANI
Published on
Updated on
1 min read

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதையடுத்து மக்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அக். 16 ஆம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்திற்குப் பின்னர், மழை எச்சரிக்கையையொட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முன்னெச்சரிக்கையாக நாளை(அக். 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். அக். 18 வரை தனியார் ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து முதல்வர், பொதுமக்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் கூறியுள்ளார்.

- விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானப் பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும்.

- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

- முக்கியப் பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.

- கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில்கூட வேண்டாம்.

அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

- கர்ப்பிணிப் பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

- பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

- அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com