சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களில், மின்சாரம், நிதி நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து போன்ற முக்கிய சேவைத் துறைகள் தவிர மற்ற அனைத்து அரசுத் துறைகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது தமிழக அரசு. வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடதமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணத்தால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு அடுத்த 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை (அக். 15) காலை முதல் சென்னையில் இடி, மின்னலுடன் தொடர் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | கனமழை: தேமுதிக அலுவலகத்தை மக்கள் பயன்படுத்தலாம்!
இதனிடையே இன்று பிற்கலம் முதல், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை) பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.