ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சென்னையில் கன மழை முதல் மிக கன மழை எதிர்பார்க்கலாம்!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் (அக்.17)அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் -வானிலை எச்சரிக்கை

News image
Updated On :16 அக்டோபர் 2024, 5:09 pm

DIN

சென்னை உள்பட 7 மாவட்டங்களில், இன்று(அக்.16) இரவு 8.30 மணி தொடங்கி, நாளை(அக்.17) காலை 8.30 மணி வரையிலான அடுத்த 12 மணி நேரத்துக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யுமென சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி,

திருவள்ளூர்

சென்னை

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

ராணிப்பேட்டை

வேலூர்

திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக். 16) மாலை 5.30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து கிழக்கு - தென்கிழக்கு திசையில் 190 கி.மீ. தூரத்திலும், ஆந்திர பிரதேசத்தின் நெல்லூருக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு இடையே வியாழக்கிழமை(அக்.17) அதிகாலை கரையைக் கடக்க அதிகம் வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.