தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

News image

மழை (கோப்புப்படம்)

Updated On :25 ஜனவரி 2026, 2:59 am

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் -இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (ஜன. 25) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Story image

காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

மேலும் அரியலூர், திண்டுக்கல், நீலகிரி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், வேலூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The Chennai Meteorological Department has announced that there is a possibility of rain in Chennai and 23 other districts over the next two hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.