
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், நல்வாய்ப்பாக பயணிகள் உயிர் தப்பினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 20) காலை, வாழப்பாடி வழியாக, சேலம் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து வெள்ளாளகுண்டம் பிரிவு அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வெள்ளாளகுண்டம் இணைப்பு சாலை வழியாக வந்த மற்றொரு தனியார் பேருந்து, சேலம் சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.
இந்த விபத்தில் இரு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து நடத்துநர் ஆகியோர் காயம் அடைந்தனர்.
ஆத்தூரில் இருந்து வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் வேகத்தை கட்டுப்படுத்தியதால், 50க்கும் மேற்பட்ட பயணிகளும் காயமின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
இந்த விபத்தால், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.