வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 65% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.
Published on

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்.1 முதல் 20 -ஆம் தேதி வரை, இயல்பைவிட 65 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் பிரதான மழைப் பொழிவைத் தருவது தென்மேற்குப் பருவமழையாக இருந்தாலும், தமிழகத்தை பொருத்தவரை அதிக மழையைத் தருவது வடகிழக்கு பருவமழை தான். அந்த வகையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், வங்கக் கடலில் அண்மையில் உருவான காற்றழுத்தத் தாழ்வு காரணமாக திருவள்ளூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 200 மி.மீ.-க்கும் அதிகமாக மழை கொட்டி தீா்த்தது. இதில், அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 30 மி.மீ. வரை மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, அக்.1 முதல் 20-ஆம் தேதி வரை இயல்பாக 95.1 மி.மீ. மழை பதிவாகவேண்டிய நிலையில், நிகழாண்டில் 156.7 மி.மீ. வரை மழை பதிவாகியுள்ளது.

இது இயல்பை விட 65 சதவீதம் அதிகமாகும்.

177 சதவீதம் அதிகம்: இதில் அதிகபட்சமாக சென்னையில் 338.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதாவது இயல்பாக 122.4 மி.மீ மழை பதிவாக வேண்டிய நிலையில், இயல்பை விட 177 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது.

அடுத்தபடியாக, சிவகங்கையில் 257 மி.மீ-யும், திருவள்ளூரில் 248மி.மீ.-யும், செங்கப்பட்டில் 211.1 மி.மீ-யும் மழை பதிவானது.

அதேபோல், குறைந்தபட்சமாக தென்காசியில் 30 மி.மீ., தூத்துக்குடியில் 37.9 மி.மீ., திருநெல்வேலியில் 44.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com