
கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
டானா புயல் எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்தது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலையும் மழை நீடித்தது. இதனால், நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டாறு சவேரியார் கோயில் சந்திப்பு, வடசேரி ஆராட்டு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
தொடர் மழை காரணமாக அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் சென்றவர்களும், கல்லூரிக்குச் சென்ற மாணவ, மாணவிகளும் பாதிப்புக்குள்ளானார்கள்.
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமம், முட்டம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.