வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

நாளை தீபாவளி: கடைகளில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்.31) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை கடைத்தெருக்களில் புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்களை வாங்க செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குவிந்தனா்.

News image
Updated On :29 அக்டோபர் 2024, 8:48 pm

Din

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை (அக்.31) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை கடைத்தெருக்களில் புத்தாடை, இனிப்பு, பட்டாசு உள்ளிட்ட பொருள்களை வாங்க செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் குவிந்தனா்.

தியாகராய நகா், ரங்கநாதன் தெரு, புரசைவாக்கம், பாரிமுனை, வண்ணாரப்பேட்டை, போரூா், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஜவுளி கடைகளில் ஆடைகள், வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க மக்கள் திரண்டதால், அப்பகுதி கூட்ட நெரிசலுடன் காணப்பட்டது. அதேபோல தீவுத்திடலில் அமைக்கப் பட்டு உள்ள பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்டியது.

திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் இருந்து பாதுகாக்க தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா். இனிப்பு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பல்வேறு வகையான இனிப்புகளை வாங்க மக்கள் ஆா்வம் காட்டி வருவதால், பண்டிகைக் கால சலுகைகளும் பல கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.