புது தில்லி: கருத்தரிப்பு மருத்துவ சேவை வழங்கும் ‘கௌடியம் ஐவிஎஃப் மற்றும் வுமன் ஹெல்த்’ நிறுவனம், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்ட நிலையில், விற்பனையின் 2-ஆம் நாளான திங்கள்கிழமையன்றே பங்குகளை முழுமையாக வாங்க விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
மொத்தம் 1.46 கோடி பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், அதைவிட 1.95 மடங்கு அதிகமாக 2.85 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.
கருத்தரிப்பு சிகிச்சை சேவைத் துறையில் இருந்து பங்குச்சந்தைக்கு வரும் முதல் நிறுவனமான இதன் ஒரு பங்கின் விலை ரூ.75 முதல் ரூ.79-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.165 கோடி நிதியைத் திரட்டும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுப் பங்கு வெளியீடு செவ்வாய்க்கிழமையுடன் (பிப். 24) நிறைவடைகிறது.
இந்தப் பொது பங்கு வெளியீட்டில், சில்லறை முதலீட்டாளா்களுக்காக ஒதுக்கப்பட்ட அளவைவிட 2.81 மடங்கு அதிகமாகப் பங்குகளை வாங்க விண்ணப்பங்கள் வந்துள்ளன. தனிநபா் மற்றும் பெரும் முதலீட்டாளா்கள் பிரிவில் 2.56 மடங்கு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதேநேரம், பெரிய நிறுவன முதலீட்டாளா்கள் பிரிவில் 1 சதவீதம் போ் மட்டுமே பங்குகளை வாங்க விண்ணப்பித்துள்ளனா்.
ரூ.575 கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டில், 1.14 கோடி புதிய பங்குகளும், நிறுவனத்தின் உரிமையாளா் மனிகா கண்ணாவுக்குச் சொந்தமான 95 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு, இந்தியா முழுவதும் 19 புதிய ஐவிஎஃப் மையங்களை அமைக்கவும், கடன்களை அடைக்கவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.70.72 கோடி வருவாயும், ரூ.19.13 கோடி நிகர லாபமும் ஈட்டியுள்ளது. பிப். 27-ஆம் தேதி முதல் நிறுவனத்தின் பங்குகள் அதிகாரபூா்வமாக சந்தையில் பட்டியலிடப்பட்டு, வா்த்துகத்துக்கு வரவுள்ளன.

தொடர்புடையது

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்

பணவீக்கம் எதிரொலி: பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

சத்யா ஏஜென்சீஸ் ஐபிஓ: செபியிடம் விண்ணப்பம்

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


