
வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டியதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது ஜெயந்தி மற்றும் 62 வது குருபூஜை விழா நடைபெறுகிறது.
இவ்விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வெங்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், வீரராக பிறந்து, வாழ்ந்து மறைந்தவர் தேவர் என முன்னாள் முதல்வர் கருணாநிதி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு சிலைகள் அமைத்து குருபூஜை நடத்தியிருக்கிறோம். மதுரையில், தேவர் சிலை, கல்லூரிகளை திமுக அரசுதான் அமைத்துள்ளது.
தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வரும் மக்களுக்காக, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் 1 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்காக தொடர்ந்து பல நல்லத் திட்டங்களை செய்வோம். இலங்கை சிறையில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.