தீபாவளி பண்டிகை முன்பதிவு: 130 பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பின
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் 130 பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பின.


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்கள் உள்ள நிலையில் 130 பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பின.
அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக்கழம் சாா்பில் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களிலும், தொடா் விடுமுறை நாள்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
இப்பேருந்துகளில் ஒரு மாதத்துக்கு முன்பு தான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளதால், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊா்களுக்கு செல்பவா்கள் வேகமாக முன்பதிவு செய்து வருகின்றனா்.
நடப்பாண்டில் அக்.31(வியாழக்கிழமை) தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதற்கு முந்தைய 2 நாட்களுக்கான முன்பதிவு இருக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன்படி, அக்.29-ஆம் தேதிக்கு தமிழகம் முழுவதும் 9,500-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா். இதில் சென்னையிலிருந்து பயணிக்க 7,200-க்கும் மேற்பட்டோா் முன்பதிவு செய்துள்ளனா்.
தொடா்ந்து 30-ஆம் தேதியும் மாநிலம் முழுவதும் 7,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இருந்து மட்டும் 5,900-க்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்படி கணக்கிட்டால், சுமாா் 130-க்கும் மேற்பட்ட பேருந்து இருக்கைகளுக்கான முன்பதிவு முற்றிலுமாக நிறைவடைந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்கு சுமாா் 2 மாதங்கள் இருக்கும்போதே 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் முன்பதிவு முடிவுற்ற நிலையில், வரும் நாள்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும். இதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அக்டோபா் மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்.
இதனால் முன்பதிவு செய்யும் பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் இணையதளத்தில் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அவா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...