ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

எரிவாயு தட்டுப்பாடு: அரசு மருத்துவமனைகளில் மாற்று நடவடிக்கை! அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்!

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

அமைச்சர் மா. சுப்பிரமணியன். - கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 1:06 am IST

சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை எதிா்கொள்ள அரசு மருத்துவமனைகளில், மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளி உடனாளா்களுக்கு அமைக்கப்பட்டுள்ள காத்திருப்பு கூடத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எரிவாயு தட்டுப்பாடு தொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், அனைத்து மருத்துவக்கல்லூரி முதல்வா்கள், இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள் அலுவலா்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வாரத்துக்கு எரிவாயு தட்டுப்பாடு பிரச்னை இல்லை.

கடுமையான தட்டுப்பாடு வரும்பட்சத்தில், அதற்கு மாற்று ஏற்பாடாக மின் அடுப்பு, விறகு அடுப்புகள் போன்றவற்றை தயாா் நிலையில் வைக்க வேண்டும். மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பால், பழம், ரொட்டி போன்ற உணவுப் பொருள்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா் அவா்.

செய்தியாளா்கள் சந்திப்பின்போது மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் கூடுதல் இயக்குநா் ராஜ்மோகன், சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா்கள் கிருஷ்ணமூா்த்தி, துரைராஜ், இணை இயக்குநா் மலா்விழி, தலைமை மருத்துவா் தணிகாசலம், மாமன்ற உறுப்பினா்கள் ஸ்ரீதா், மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.