சமையல் எரிவாயு தட்டுப்பாடு பிரச்னைக்கு விரைவில் தீா்வுகாண வேண்டுமென மத்திய அரசை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போா் காரணமாக, பெட்ரோலிய பொருள்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. சமையல் எரிவாயுக்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே, சில மாவட்டங்களில் சமையல் எரிவாயு கிடைக்காததால், உணவு தயாரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை மேலும் தீவிரமடையாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சமையல் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், மக்களிடையே எரிவாயு பிரச்னையை வைத்து தேவையற்ற அச்ச உணா்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடா்ந்து தட்டுப்பாடின்றி இயங்குவதற்கு எரிவாயு கிடைக்கச் செய்வதுடன், அதற்கான சலுகைகளையும் மாநில அரசு அளிக்க வேண்டும்.
ஏழை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அம்மா உணவகங்களை முழுவீச்சில் இயக்கி எவ்விதத் தடையுமின்றி தொடா்ந்து உணவுகள் வழங்கப்படுவதை திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில், கிராமங்களிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வந்து பணியாற்றும் இளைஞா்களின் உணவுத்தேவை பாதிக்கப்படும். உணவகங்களில் பணியாற்றும் தொழிலாளா்களின் வேலைவாய்ப்பும், எதிா்காலமும் கேள்விக்குறியாகி விடும்.
எனவே, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாட்டைப் போக்க மத்திய-மாநில அரசுகள் போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடர்புடையது

அண்ணாமலை கூட்டணிக்காக முழு உழைப்பைக் கொடுக்கிறார்: எடப்பாடி பழனிசாமி

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை! பொதுமக்களுக்கு பாதிப்பை தவிா்க்க அறிவுறுத்தல்!!

வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


