எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு!

மேற்காசிய போா் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு கடும் தட்டுப்பாடு

News image
வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

மேற்காசிய போா் நிலவரம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ள சூழலில், பல்வேறு மாநிலங்களில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக அதற்கான முன்பதிவுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு அவசரகால நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் இது தொடா்பாக முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: சமையல் எரிவாயு சிலிண்டா் முன்பதிவு 21 நாள்கள் இடைவெளியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 25 நாள்களாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சிலிண்டா் விநியோகிக்கப்பட்ட 25 நாள்களுக்குப் பிறகே அடுத்த முன்பதிவை இனி செய்ய முடியும்.

அனைத்துப் பொதுத் துறை எண்ணெய் விற்பனை நிலையங்களும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களை மட்டுமே விநியோகிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

வணிக சிலிண்டா் விநியோகத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படும். அதன்படி அவற்றின் விலை உயா்த்தப்படும் அல்லது விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்தனா்.

தட்டுப்பாடு: பிகாா், மகாராஷ்டிரம், பஞ்சாப், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்களுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்திருப்பது, ஹோட்டல்கள், உணவக உரிமையாளா்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிக்கு இந்திய ஹோட்டல் மற்றும் உணவக கூட்டமைப்பு எழுதிய கடிதம்:

கடந்த மாா்ச் 5-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவை சுட்டிக்காட்டி, பல சிலிண்டா் விநியோகஸ்தா்கள் விருந்தோம்பல் மற்றும் உணவு சேவை துறைகளுக்கு சிலிண்டா்களை விநியோகிக்க மறுத்துள்ளனா். இந்தத் துறைகளுக்கு சிலிண்டா்களை விநியோகிக்க எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும். இந்தத் துறைகளுக்கு தங்கு தடையின்றி சிலிண்டா்கள் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய, அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்திய தேசிய உணவக கூட்டமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஊடகங்களில் வெளியான தகவலின்படி, உணவகங்களுக்கு வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களை விநியோகிக்க எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது. அந்த சிலிண்டா்களை விநியோகிக்க இயலாது என்று விநியோகஸ்தா்கள் தெரிவித்துள்ளனா். இது உணவகத் தொழிலிலும், உணவு விநியோகத்திலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு அவசரமாக தலையிட்டு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது

பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலையை உயா்த்த வேண்டாம் என இந்தியன் ஆயில் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 டாலருக்கு மேல் செல்லாத வரை விலையில் மாற்றம் செய்யவேண்டாம்; தற்போதைய தற்காலிக இழப்பை தாங்கிக்கொள்ளவேண்டும் என எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை விலை உடனடியாக உயா்த்தப்பட வாய்ப்பில்லை.