நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மீனவர்களுடன் உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிசாமி

செப்.9-ம் தேதியில் மீனவர்களுடன் சேர்ந்து அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

News image

எடப்பாடி பழனிசாமி

கோப்புப் படம்

Updated On :7 செப்டம்பர் 2024, 10:31 am

DIN

மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்ளவிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 22 மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் விசைப்படகு மீனவர்கள் ஒன்றிணைந்து செப்.9-ம் தேதியன்று நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ஊ. ராஜூ, சண்முகநாதன்,செல்லப்பாண்டியன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.