மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
Updated on
1 min read

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு பிரச்னை வருகிறது என்றால், உடனடியாக அந்த பிரச்னையை சந்திக்க வேண்டும். அந்த பிரச்னைக்கு என்ன தீர்வு, நடவடிக்கை என்ன என எடுக்க வேண்டும்.

எடுத்துவிட்டால் நான் அடுத்த பணிக்குச் சென்றுவிடுவேன். எனவே காவல்துறை வசம் வழக்கு போய் உள்ளது. காவல் துறை அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள். மாற்றுத்திறனாளி சங்கத்தினர் அவமானப்படுத்தியதாக புகார் அளித்துள்ளனர். இனிமேல் காவல்துறையும் - மாற்றுத்திறானாளி சங்கத்தினரும் பார்த்துக் கொள்வார்கள்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
சர்ச்சை பேச்சு: சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அவர் செய்தது தப்பா இல்லையா என்று சட்டம் தன் கடமையை செய்யும். நாங்கள் இனி பள்ளிக்கூடத்தில் நிகழ்ச்சிகள் நடக்கும்போது ஒரு குழு அமைத்து யார் யார் பேச வேண்டும்? என்ன மாதிரி நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று நெறிமுறைகள் வரையறுக்க இருக்கிறோம். மிக விரைவில் அதற்கான கமிட்டி அமைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com