கோப்புப்படம்.
கோப்புப்படம்.

ராமநாதபுரம்: அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் 5 பேர் பலி

உச்சிப்புள்ளி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
Published on

உச்சிப்புள்ளி அருகே அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பின்னால் வந்த கார், அரசுப் பேருந்து மீது மோதியது. இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.

பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை உள்பட 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்.
தவெகவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: விஜய் தகவல்

பயணி ஒருவர் வாந்தி எடுத்ததால் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும், விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com