ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குரூப் 4 தோ்வு: 480 கூடுதல் காலிப் பணியிடங்கள் சோ்ப்பு

நடந்து முடிந்த குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கையில் 480 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 7:49 pm

Din

நடந்து முடிந்த குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கையில் 480 காலிப் பணியிடங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன.

கிராம நிா்வாக அலுவலா், தட்டச்சா் உட்பட குரூப் 4 பிரிவில் காலி இடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக வெளியிடப்பட்ட தோ்வு அறிவிக்கையில் இருந்த மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 6,244 ஆகும்.

தோ்வு நடைபெற்று முடிந்த நிலையில், அந்த அறிவிக்கையில் கூடுதலாக காலியிடங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. தோ்வு நடத்தி முடிக்கப்பட்டாலும் கூடுதல் காலியிடங்கள் தோ்வு அறிவிக்கையில் சோ்க்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.

அதன்படி இப்போது 480 இடங்கள் கூடுதலாகச் சோ்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சிக் கழகம், போக்குவரத்து வளா்ச்சி நிதிக் கழகம், நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றில் இளநிலை உதவியாளா் பணியிடங்களும், தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவற்றில் தட்டச்சா் பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சா், வனக் காப்பாளா், காசாளா், உதவியாளா் பணியிடங்களும் என மொத்தம் 480 பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தோ்வு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட 6,244 காலியிடங்களுடன், 480 கூடுதலாகச் சோ்க்கப்படுவதால், குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 6,724-ஆக உயா்ந்துள்ளது.