
மதுரையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும், மூன்று பெண்கள் பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
2 உயிரிழப்பு; 3 படுகாயம்
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விடுதியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கியிருந்த நிலையில், பரிமளா (வயது 50) என்ற பெண்ணும் சரண்யா (வயது 22) என்ற மாணவியும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மூன்று பெண்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால், விடுதிகளில் தங்கியிருந்த பல பெண்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
தீ விபத்து ஏற்பட்ட பெண்கள் விடுதிக்கு சென்ற மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
முதல்கட்ட விசாரணையில், விடுதியில் இருந்த குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.