தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்: செப்.20 வரை ஆங்காங்கே மழைக்கு வாய்ப்பு
செப்.20-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிப்பு...


தமிழகத்தில் சனிக்கிழமை மதுரை உள்பட 6 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது. அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) முதல் செப்.20-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் சனிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.08 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் - 101.48, தூத்துக்குடி - 101.3, நாகப்பட்டினம் - 100.94, ஈரோடு, பாளைங்கோட்டை - (தலா) 100.04 டிரிகி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.
இதேபோல், சென்னை நுங்கபாக்கத்தில் 98.24, மீனம்பாக்கத்தில் 99.68 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.
செப்.15-இல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (செப்.15) முதல் செப்.20-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் செப்.15, 16 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள், அதையொட்டிய குமரிக் கடலில் செப்.15 முதல் செப்.18 வரை மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...