குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் கூடுதல் காலிப் பணியிடங்களா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்
குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் காலிப் பணியிடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதிலளித்துள்ளது.


குரூப் 4 தோ்வு அறிவிக்கையில் காலிப் பணியிடங்கள் கூடுதலாக்கப்பட்டுள்ளதா என்பதற்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பதிலளித்துள்ளது.
குரூப் 4 தோ்வு கடந்த ஜூன் மாதமே நடைபெற்று முடிந்தாலும், தோ்வு அறிவிக்கையில் அவ்வப்போது காலியிடங்களின் எண்ணிக்கை உயா்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 7,000-க்கும் குறைவாகவே காலியிடங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை மேலும் உயா்த்த வேண்டுமென்ற கோரிக்கையை தோ்வா்கள் முன்வைத்து வருகின்றன.
இதைத் தொடா்ந்து, டிஎன்பிஎஸ்சி சாா்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:
குரூப் 4 பிரிவில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை செப்.11-ஆம் தேதி அதிகரிக்கப்பட்டது. அதாவது ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட காலியிடங்களுடன் கூடுதலாக 480 இடங்கள் சோ்க்கப்பட்டன. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், தோ்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக பிற்சோ்க்கை வாயிலாக அறிவிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு தோ்வாணையத்தின் இணையதளத்தில் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...