
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 15 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மேலும் வழக்கு தொடர்பாக இதுவரையில் வழக்குரைஞா்கள் உள்பட 28 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது.
வழக்கில் கைதான 10 பேர் ஏற்கெனவே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதான நிலையில் தற்போது மேலும் 15 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு துலக்கும் வகையில், அவரது ஆதரவாளா்களிடம் தனிப்படையினா் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.