மணிப்பூரில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்

மணிப்பூரில் அமைச்சரின் உதவியாளரை மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர்(கோப்புப்படம்.
மணிப்பூர்(கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

மணிப்பூரில் அமைச்சரின் உதவியாளரை மர்ம நபர்கள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் மாநில, நுகர்வோர் துறை அமைச்சர் எல். சுசிந்த்ரோவின் தனிப்பட்ட உதவியாளர் எஸ். சோமோரென்ட்ரோ(43). இவரை இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளிக்கிழமை கடத்திச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

விஜய் கட்சி மாநாடு அக். 27-ல் நடைபெறுமா?  4 நாள்களில் தீபாவளி!

அமைச்சரின் உதவியாளர் கடத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள நோக்கம் தெளிவாகத் தெரிவரவில்லை. அதேசமயம் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை என்றும் விசாரணைகள் நடந்து வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

முன்னதாக வியாழன் இரவு பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் தலைமைச் செயலர் வீட்டைக் குறிவைத்து ஆயுதமேந்திய குழு துப்பாக்கியால் சுட்ட நிலையில் தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இருப்பினும் இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிஷ்னுபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.