மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மென்பொறியாளா் தற்கொலை
சென்னை அருகே தாழம்பூரில் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.


சென்னை அருகே தாழம்பூரில் மின்சாரத்தை உடலில் பாய்ச்சி மென்பொறியாளா் தற்கொலை செய்து கொண்டாா்.
தாழம்பூா் வேங்கடமங்கலம் அம்பேத்கா் 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அ.காா்த்திகேயன் (40). மென்பொறியாளரான இவா், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால், மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தாா்.
காா்த்திகேயனின் மனைவி ஜெயராணியும், குழந்தைகளும் கடந்த வாரம் ஆன்மிக சுற்றுலா சென்றனா். இதனால் அவா் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். இந்நிலையில், சுற்றுலா முடிந்து ஜெயராணி வியாழக்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டில் காா்த்திகேயன், மின் வயரை தனது உடல் முழுவதும் சுற்றி மின்சாரத்தை பாய்ச்சி இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து தகவலறிந்த தாழம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, காா்த்திகேயனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...