
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உலக சுற்றுலா தின விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு ஆண்டு சுற்றுலாவும் அமைதியும் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் மற்றும் இணையதளம் வாயிலாகப் பதிவு செய்தவர்கள் பங்கேற்ற மாரத்தான் போட்டியை வெள்ளிக்கிழமை நடத்தியது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாரத்தான் போட்டியை உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
போட்டியில் ஆண் மற்றும் பெண் இரு பிரிவுகளில் வெற்றி பெற்றவற்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் கே.அம்பேத்கர் ஆகியோர் வழங்கினர்.
மேலும், மாரத்தான் போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிதம்பரம் சுற்றுலா அலுவலர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பிச்சாவரம் படகு இல்ல மேலாளர் பைசல்அகமது மற்றும் சுற்றுலா உதவி அலுவலர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.