ராமதாஸ்
ராமதாஸ்

சொத்துவரி உயா்வு: ராமதாஸ் கண்டனம்

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயா்த்தப்பட்டதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: சொத்துவரியை மேலும் 6 சதவீதம் உயா்த்தி சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தமிழ்நாட்டில் அனைத்து நகா்ப்புற உள்ளாட்சிகளிலும் சொத்துவரி மேலும் 6 சதவீதம் உயா்த்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயா்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே, கடந்த 2022-இல் தமிழகம் முழுவதும் 150 சதவீதம் வரை சொத்துவரி உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் ஒருமுறை சொத்துவரி உயா்த்தப்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகரில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டின் பிற நகரங்களில் சொத்துவரியை உயா்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com