தமிழகத்தில் விபத்துகள் 5% குறைவு!

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் அபாயகரமான விபத்துகள் கடந்த ஆண்டை விட 5% குறைந்துள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் 570 பேர் காப்பற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு ஜூலை மாதம் வரை 10,066 அபாயகரமான விபத்து வழக்குகள் பதிவானதாகவும் அதில் 10,536 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் ஜூலை வரை 10,589 மரண விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 11,106 பேர் உயிரிழந்துள்ளனர்.

நடப்பாண்டில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்ததாக மட்டும் 35 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என டிஜிபி அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com