9 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!
13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு....


தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது குறித்து, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
ஞாயிற்றுக்கிழமை (செப். 29) - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஈரோடு, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
திருப்பூர்
திண்டுக்கல்
தேனி
மதுரை
விருதுநகர்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தூத்துக்குடி
ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திங்கள்கிழமை (செப். 30) - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள்,
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
தென்காசி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரின் ஒரு சில பகுதிகளில் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (செப். 29) பகல் 12.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக மணப்பாறையில் 11 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும், நாளையும், மன்னார் வளைகுடா, தென்தமிழகக் கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள், அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவுப் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
செவ்வாய்க்கிழமை (அக். 1) தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகள், வியாழக்கிழமை (அக். 3) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
எனவே, மேற்கண்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...