அண்ணாமலை
அண்ணாமலை (கோப்புப் படம்)

உதயநிதி துணை முதல்வா்: அண்ணாமலை விமா்சனம்

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கியது குறித்து அண்ணாமலை விமர்சனம்.
Published on

உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டன் மூலம் அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை விமா்சித்துள்ளாா்.

அவா் ‘எக்ஸ்’ தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக நியமிக்கப்பட்டதன் மூலம் கடந்த 40 மாதங்களாக அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது. மற்றவா்களுக்கு சூரிய கிரகணம் மட்டுமே தெரிகிறது.

தமிழக மக்களுக்கு விடியல் என்றால் என்னவென்று இப்போது புரிந்திருக்கும். தனக்கு, தன் குடும்பத்துக்கு, தங்கள் தலைவா்களுக்கு மட்டுமே விடியல் ஏற்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளாா் அண்ணாமலை.

X
Dinamani
www.dinamani.com