மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நரிமேடு பகுதியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். மேலும் பொன்மேனி, சிந்தாமணி, நாகமலை உள்ளிட்ட இடங்களில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதையடுத்து மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பள்ளிகளில் எந்த ஒரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப் படவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
இதனிடையே மிரட்டல் இமெயில் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மதுரையில் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் சற்று பரபரப்பு காணப்பட்டது.