மழை காரணமாக தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் உதகை மலை ரயில் சேவை(செப்.30) இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.
இந்த நிலையில் மழை காரணமாக மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் பாதையில் கல்லார்-அடர்லி ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் உதகை-மேட்டுப்பாளையம் இடையே மலை ரயில் சேவை இன்று(திங்கள்கிழமை) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.